Home One Line P1 சிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று

சிவகங்கா: மேலும் அறுவருக்கு கொவிட்19 தொற்று

966
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று பிற்பகல் நிலவரப்படி கொவிட்19 தொடர்பாக 15 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் ஐந்து சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும், மேலும் பத்து பேர் உள்ளூரில் தொற்றுக் கண்டவர்கள்.

மலேசியாவில் தொற்றுக் கண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9,038 சம்பவங்களாக உயர்ந்துள்ளது. தற்போது 200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கெடா – சிவகங்கா தொற்றுக் குழுவிலிருந்து ஆறு சம்பவங்கள் பதிவாகியது. இந்த சம்பவங்கள் நாப்போவில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளரிடமிருந்து தொடங்கியது

“இதன் மூலமாக, இந்த தொற்றுக் குழுக் காரணமாக 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டன. 704 பேர் இன்னும் முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர்,” என்று சுகாதார அமைச்சு இயக்குனர் நூர் ஹிஷாம் கூறினார்.

இன்று 11 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மொத்தம் 8,713 சம்பவங்கள் அல்லது மொத்தத்தில் 96.4 விழுக்காட்டினர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.