Home One Line P1 எம்ஏசிசி: சட்டவிரோத சூதாட்டம் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவினர் கைது

எம்ஏசிசி: சட்டவிரோத சூதாட்டம் விவகாரத்தில் அமலாக்கப் பிரிவினர் கைது

611
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை பூலோவைச் சுற்றி சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட வளாகங்களை பாதுகாக்க மாதாந்திர இலஞ்சம் வசூலித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் மூன்று ஷா அலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டனர்.

சாட்சியமளிக்க அழைத்தபோது சுங்கை பூலோ கிளையைச் சேர்ந்த 2 அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஷா அலாமைச் சேர்ந்த ஒருவர் புத்ராஜெயா எம்ஏசிசி தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனையில் 41 முதல் 49 வயது வரையிலான அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

எம்ஏசிசி துணை தலைமை ஆணையர் அகமட் குசைரி யஹாயா கைதுகள் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

“அமலாக்கத்தில் ஊழல் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தகவல்களைக் கொண்ட எந்தவொரு தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். தகவல் கொடுப்பவரின் அடையாளம் மற்றும் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பான காணொளி பரவியதைத் தொடர்ந்து, சுங்கை பூலோவில் அதிகாரிகள் சட்டத்தை அமல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, உரிமம் இல்லாமல் வணிகங்களிலிருந்து இலஞ்சம் வாங்குவதாகக் கூறப்படுவதைத் தவிர, சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சிகரெட்டுகள் விற்பனை உள்ளிட்டவை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இலஞ்சம் கொடுப்பது அல்லது பெறுவது தொடர்பான குற்றம் தொடர்பான எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 17 (அ)- இன் படி விசாரணை நடத்தப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார்கள்.

இதற்கிடையில், ஒரு ஆச்சே வணிகர் 2019 முதல் சட்டவிரோத சிகரெட்டுகளை விற்றுவருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

“எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க, அவர் அமலாக்கத்திற்கு ஒரு மாதத்திற்கு 300 ரிங்கிட் இலஞ்சம் கொடுப்பதாக கூறப்படுகிறது,” என்று அவர் கூறினார்.