மலாக்கா: இன்று காலை பலத்த புயல் காரணமாக, இங்குள்ள மாலிம் தேசிய வகை சீனப்பள்ளியின் 6 மாணவர்கள், பள்ளி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்தனர்.
மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் இது குறித்து தெரிவித்துள்ளார்.
காலை 10 மணியளவில் நடந்த இந்த சம்பவம் மேலும் 22 மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
“தலையில் இலேசான காயம் அடைந்த 6 மாணவர்கள் மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட 22 மாணவர்கள் பள்ளியில் உள்ள லிம் கோக் வா டான் ஜியோக் போய் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
துணை கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் மற்றும் மலாக்கா முதல்வர் டத்தோ சுலைமான் முகமட் அலி சம்பவ இடத்தினை பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அதிகாரிகள் இன்னும் அடையாளம் கண்டு வருகின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பிறகு பள்ளியைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் இப்போது அமைதியாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது.