Home One Line P1 கொவிட்19: உள்நாட்டில் மலேசியர்களுக்கு தொற்று இல்லை

கொவிட்19: உள்நாட்டில் மலேசியர்களுக்கு தொற்று இல்லை

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,103-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 9 சம்பவங்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 4 வெளிநாட்டினர்  உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். மலேசியர்களுக்கு உள்நாட்டில் தொற்று இல்லை.

#TamilSchoolmychoice

இன்று 6 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,809 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 169 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் அவசரப் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மரண எண்ணிக்கை தொடர்ந்து 125- ஆக இருந்து வருகிறது.