Home One Line P1 டத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்

டத்தோஸ்ரீ சரவணனின் மாமியார் காலமானார்

900
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் துணைவியார் டத்தின்ஸ்ரீ வி.கவிதா அவர்களின் தாயார் திருமதி அம்பிகா தேவி (படம்) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு 8.39 மணியளவில் காலமானார் என்ற துக்கத் செய்தியை அவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மறைந்த அம்பிகா தேவியின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

எண் : 39, ஜாலான் செத்தியா ஜெயா, புக்கிட் டாமன்சாரா, கோலாலம்பூர்
39, Jalan Setiajaya, Bukit Damansara Kuala Lumpur

#TamilSchoolmychoice

அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் பெட்டாலிங் ஜெயா, கம்போங் துங்கு மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இந்தத் தகவல்களை டத்தோஸ்ரீ எம்.சரவணன் – அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ வி.கவிதா குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.