Home One Line P2 பெட்ரோனாஸ் 17 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பை எதிர்நோக்கியது

பெட்ரோனாஸ் 17 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பை எதிர்நோக்கியது

508
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையில்  கொவிட் -19 பிரச்சனையால் நாடு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை எதிர்நோக்கிய காலகட்டத்தில் பெட்ரோனாஸ் 17 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பை சந்தித்தது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட காலத்தில்  பல பெரும் நிறுவனங்கள் கூட வருமான இழப்பையும், நஷ்டத்தையும் எதிர் நோக்கின.

உலகமெங்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பின்பற்றப்பட்ட காலத்தில் உலக அளவில் எண்ணெய் விலைகள் கடுமையாக சரிவு கண்டன.

#TamilSchoolmychoice

பிப்ரவரி மாதத்தில் பீப்பாய் ஒன்று 51 டாலர் 80 காசு என்ற விலையில் பரிமாற்றம் கண்ட பெட்ரோலிய எண்ணெய் மார்ச் மாதத்தில் 20 டாலர் 37 காசாக பெருமளவில் வீழ்ச்சியடைந்தது.

நடமாட்டக் கட்டுப்பாடுகளால் எங்கும் வாகனங்கள் ஓடவில்லை.  விமானப் பயணங்களும்  முற்றாக தடை செய்யப்பட்டன.  இதனால் பெட்ரோலியப் பயன்பாடு பெருமளவில் குறைந்தது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு மார்ச் முதற்கொண்டு ஜூன் வரையிலான காலாண்டில் பெட்ரோலியம் மூலம் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குக் கிடைத்து வந்த வருமானம் குறைந்தது. அதனால் 17 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவலை நாடாளுமன்ற கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மொகிதின் யாசின் எழுத்து மூலம் வழங்கியிருக்கிறார்.