Home One Line P1 தாவார் தொற்றுக் குழுவில் மேலும் எழுவருக்கு தொற்று

தாவார் தொற்றுக் குழுவில் மேலும் எழுவருக்கு தொற்று

367
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசியாவில் நேற்று 12 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு சம்பவங்கள் கெடா மற்றும் பினாங்கில் உள்ள தாவார் தொற்றுக் குழுவுடன் தொடர்பானவை.

சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், இந்த தொற்றுக் குழுக்களிலிருந்து இப்போது மொத்தம் 46 சம்பவங்கள் உள்ளதாகக் கூறினார்.

“புதிய சம்பவங்கள் அனைத்தும் மூன்றாம் வரிசை குழுக்களைத் (Third generation) தாண்டியுள்ளது” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தாவார் தொற்றுக் குழுவின் கீழ் மொத்தம் 1,135 பேர் பரிசோதிக்கப்பட்டதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

கெடாவில் பரிசோதிக்கப்பட்ட 918 பேரில், 39 சம்பவங்கள் கண்டறியப்பட்டன. இதுவரை, அவர்களில் 655 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 224 நபர்கள் இன்னும் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

பினாங்கில் ஏழு சம்பவங்கள் கண்டறியப்பட்டன. பரிசோதிக்கப்பட்ட 208 பேரில் 175 பேர் தொற்றுக் கண்டுள்ளனர். மேலும், 26 பேர்களின் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளனர்.

இந்த தொற்றுக் குழுத் தொடர்பாக ஒன்பது நபர்களும் பேராக்கில் பரிசோதிக்கப்பட்டனர். இதுவரை எவரும் தொற்றுக்கு ஆளாகவில்லை.