Home One Line P1 மாநில அரசுகள் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடாது

மாநில அரசுகள் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடாது

463
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில வணிக, சமூக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மாநில அரசுகள், மத்திய அமைச்சர்களின் சிறப்புக் கூட்டதுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் ஒரு சில பகுதியில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்ததற்கும் இரு பொருந்தும் என்று அவர் கூறினார். மாநில அரசுக்கு அவ்வாறு செய்ய ஒரு குறிப்பிட்ட அதிகாரம் இல்லை. மேலும், இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சவால் செய்யலாம் என்று அவர் கூறினார்.

“சிலர் இரத்து செய்ய தங்கள் சொந்த முடிவை எடுத்துள்ளனர். மருத்துவ சுற்றுலா உள்ளிட்ட சில வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கவில்லை. சிலர் கடுமையான கட்டுப்பாட்டு ஆணைக் கீழ் சில பகுதிகளை மூட திட்டமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“இவர்கள் முதலில் அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், அரசு ஆணையிடப்பட்டிருந்தால் மட்டுமே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியும், ” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று, பினாங்கு அரசு மருத்துவ சுற்றுலாப் பயணிகளை தற்காலிகமாக மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்காது என்று மாநில முதல்வர் சௌ கோன் இயோ தெரிவித்திருந்தார்.