அவர் சென்னை மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று, உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனையில் இணைந்தனர்.
சமூக ஊடகங்களில் தனது தந்தையின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சரண் நன்றி தெரிவிக்கும் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
“இதுவரை எனது தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே இதைப் பற்றி அதிகம் புதுப்பிக்க வேண்டியதில்லை. ஆனால், நான் சொன்னது போல், நம்பிக்கையுடன் இருப்போம். நானும் என் குடும்பத்தினரும், அவர்மீது வைக்கப்பட்ட அனைத்து பிரார்த்தனைகளும் அவரை சீக்கிரம் குணமடைய உதவும் என்று நம்புகிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.
“எனது தந்தைக்காக பொது மக்கள் பிரார்த்தனைக்காக ஒன்றுகூடி நாடு முழுவதும் உள்ள திரைப்பட மற்றும் இசைத் துறையினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அன்பிற்கும் பாசத்திற்கும் எங்கள் குடும்பம் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று அவர் கூறினார்.