Home One Line P1 புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்து வெளியேற்றம்

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்து வெளியேற்றம்

751
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவரை வெளியேற்றும் உத்தரவை நாடாளுமன்ற அவைத்தலைவர் அசார் அசிசான் ஹருண் பிறப்பித்தார்.

நிதி அமைச்சர்  தெங்கு சாப்ருல் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 101 திட்டங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் பொது குத்தகை இன்றி வழங்கியதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற ஆளும் கட்சி உறுப்பினர்களும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரம் நீடித்த அமளியைத் தொடர்ந்து அனைவரையும் அமரும்படி அவைத்தலைவர் அசார் அசிசான் ஹருண் உத்தரவிட்டார்.

எனினும்  புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தனது இருக்கையில் அமராமல் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டதால் அவையிலிருந்து இன்று ஒரு நாளைக்கு அவரை வெளியேற்றும் உத்தரவை அசார் பிறப்பித்தார்.

நிதி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் நிதி அமைச்சரும் பாகான் (பினாங்கு) நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் வழங்கப்பட்ட குத்தகைகளின் பட்டியலை வெளியிடுமாறு தெங்கு சாப்ருலுக்கு சவால் விடுத்தார்.

தனது பதவிக்காலத்தில் அவ்வாறு எத்தனை குத்தகைகள் நேரடியாக வழங்கப்பட்டன, இப்போது தேசிய கூட்டணி ஆட்சியில் எத்தனை குத்தகைகள் வழங்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடுமாறு  லிம், தெங்கு சாப்ருலைக் கேட்டுக் கொண்டார்.

தான் நேரடியாக வழங்கிய அனைத்து குத்தகைகளும் அமைச்சரவையின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு அதன் ஒப்புதலோடு தான் வழங்கப்பட்டன என்றும் லிம் குவான் எங் தெரிவித்தார்.

அவரது விளக்கத்தை தொடர்ந்து அமைச்சர் அஸ்மின் அலி எழுந்து பதிலளிக்க முற்பட்ட போது மீண்டும் சர்ச்சைகள் வாக்குவாதங்கள் இருந்தன.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் வெளியேற்றப்பட்டார்.