Home One Line P1 கொவிட்19: பாதிக்கப்பட்டவர்களில் 53 விழுக்காட்டினர் சுகாதாரத் துறை ஊழியர்கள்

கொவிட்19: பாதிக்கப்பட்டவர்களில் 53 விழுக்காட்டினர் சுகாதாரத் துறை ஊழியர்கள்

459
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த கொவிட் 19 சம்பவங்களில் 53 விழுக்காடு சுகாதாரத் துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொவிட்19 நோயால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் மற்ற சுகாதார ஊழியர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்களிடையே கொவிட்19 சம்பவங்கள் பெரும்பாலும் சுகாதார ஊழியர்களிடையே பரவுவதாக விசாரணையின் முடிவுகள் கண்டறிந்தன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த நிலைமை கவலை அளிக்கிறது. ஏனெனில் அவர்கள் நாட்டின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

“கொவிட்19 நோயால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மற்ற சுகாதார ஊழியர்களைப் பாதிக்கின்றனர்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சமூகத்தில் தொற்று எண்ணிக்கை 22 விழுக்காடு என்று ஹிஷாம் கூறினார்.

“கொவிட் 19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எல்லா நேரங்களிலும், குறிப்பாக கடமையில் இருக்கும்போது எடுக்கப்படுவதை சுகாதார ஊழியர்கள் உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம்.

“பணியில், சக ஊழியர்களிடையே மற்றும் நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் போது பாதுகாப்பான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதை வேலை நேரம் முழுவதும் பயிற்சி செய்யப்பட வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நிலவரப்படி நாட்டில் 24 புதிய சம்பவங்கள் பதிவாகி உள்ளன.