வாஷிங்டன்: சீன நாட்டினரின் 1,000-க்கும் மேற்பட்ட விசாக்களை இந்த வாரம் வரை அமெரிக்கா இரத்து செய்துள்ளது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.
மே 29 பிரகடனத்தில், அதிபர் டொனால்டடு டிரம்ப் சில சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அமெரிக்காவிற்குள் நுழைவதை தடைசெய்தார்.
முக்கியமான அமெரிக்க தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பெறுவதற்குப் அவர்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
இந்த தடையை வெளியுறவுத் துறை ஜூன் 1 முதல் அமல்படுத்தத் தொடங்கியது.
“1,000 க்கும் மேற்பட்ட விசாக்களை திணைக்களம் இரத்து செய்துள்ளது. அவர்கள் 10043- க்கு உட்பட்டவர்கள் என்றும், விசாவிற்கு தகுதியற்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது” என்று அத்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்தார்.
யாருடைய விசாக்கள் இரத்து செய்யப்பட்டன என்பது குறித்த குறிப்பிட்ட விவரங்களை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.
முன்னதாக புதன்கிழமை, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்பட்ட டஜன் கணக்கான சீன மாணவர்கள் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து தங்களுக்கு விசா இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.