Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது

கொவிட்19: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது

603
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா முழுவதும் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.8 மில்லியனைக் கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 92,071 பேர் இந்த தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1,136 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மொத்தமாக 4,846,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 79,722 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 986,598 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3,780,108 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடக, தெலுங்கானா – தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும்.