Home One Line P1 “ஒற்றுமையாய் வாழ்வோம்…மலேசியர்களாய் வெல்வோம்” – சரவணன்

“ஒற்றுமையாய் வாழ்வோம்…மலேசியர்களாய் வெல்வோம்” – சரவணன்

835
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான
டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது மலேசிய தின வாழ்த்துச் செய்தியில,

இனம் கடந்து
மொழி கடந்து
மதம் கடந்து
ஒற்றுமையாய் வாழ்வோம்
தனித்துவத்தைப் போற்றுவோம்
மலேசியர்களாய் வெல்வோம்

எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. நாடு நலம்பெறவும் மேலும் வலிமை பெறவும், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும். நாம் பெற்ற வளர்ச்சியும், மேம்பாடும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவை என்பதை நாம் மறக்கக் கூடாது. உலகப் பார்வையில் போற்றிப் புகழப்படும் மலேசியாவின் கலாச்சாரமும், பல்லின மக்களின் ஒற்றுமையும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகளில் மக்கள் எவ்வாறு வேறுபாடுகளையும் பன்முகத்தன்மையையும் சமாளித்து ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் வாழ்கிறார்கள் என்பதே நமது வெற்றி. இந்த நன்னாளில் மலேசியர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம், மலேசியர்களாக வாழ்வதற்கு” என சரவணன் தனது மலேசிய தினச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

“உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், கலாச்சாரங்கள் என்று நாம் கொண்டாடி மகிழ எத்தனையோ தருணங்கள். ஒருவருக்கொருவர் பரிவுடன் பழகுவோம், மரியாதை செலுத்துவோம். மலேசியாவில் வாழும் பல்லின வேறுபாட்டின் தனித்துவத்தைப் பாராட்டுவோம்.
உலகளாவிய நிலையில் சுகாதார மற்றும் பொருளாதார சிக்கலை நாம் அனுபவித்து வருகிறோம். ஆனாலும், மலேசியர்களின் பொறுப்பான நடவடிக்கை, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தல், அரசாங்கத்தின் பரிவுமிக்க உதவிகள், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை என்று ஒட்டுமொத்த மலேசியர்களின் உதவியால் நாம் இந்த சிக்கலான காலகட்டத்தை வெற்றிகரமாக வென்று வருகிறோம். இதே மன உறுதியோடு, மன தைரியத்தோடு நாம் தொடர்ந்து மலேசியர்களாக பயணிப்போம்” எனவும் சரவணன் தனது செய்தில் குறிப்பிட்டார்.

தனது மலேசிய தின செய்தியை கீழ்க்காணுமாறு சரவணன் நிறைவு செய்தார் :

அனைவருக்கும் மனமார்ந்த மலேசிய தின வாழ்த்துகள்.

எண்ணங்கள் யாவும் தேசப்பற்று
நாட்டு மக்களின் மீது அன்பு ஊற்று