கோலாலம்பூர்: மழைநீரை தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய மாநிலங்களில் கிளந்தான் இருப்பதாக சுற்றுச்சூழல், நீர் வளத்துறை அமைச்சர் துவான் மான் கூறினார்.
குறிப்பாக போதுமான நீர் வழங்கல் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது இது அவசியம் தேவைப்படும் என்று அவர் கூறினார்.
மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், கிளந்தான் தொழில்துறை மாசுபாடுகளால் அதிகம் சிக்காமல் இருப்பதாகவும், எனவே மழைநீரின் தரம் சிறந்ததாக இருக்கும் என்றும் துவான் இப்ராகிம் தெரிவித்தார்.
“மற்றவர் மாநிலங்களைக் காட்டிலும், கிளந்தான் மழைநீரிலிருந்து பயனடையலாம். ஏனெனில் இந்த மாநிலத்தில் அதிக தொழில்துறை இல்லாமல், குறைந்த காற்று மாசுபாடு உள்ளது” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.
கிளந்தான் அரசாங்கத்தை நீண்ட காலமாக பாதித்து வரும் அடிப்படை வசதிகளில் ஒன்று சுத்தமான நீர் விநியோகம் ஆகும்.
போதுமான நீர் விநியோகம் இல்லாததோடு மட்டுமல்லாமல், நீர் குழாய்களில் வெளிவரும் அழுக்கு நீரும் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானது.