கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கொவிட்19 தொடர்பான மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக நாட்டில் மரண எண்ணிக்கை 133-ஆக் உயர்ந்துள்ளது.
147 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று மாலை உறுதிப்படுத்தியது.
உள்ளூர் தொற்று எண்ணிக்கை 143 பதிவாகி உள்ள நிலையில், நான்கு இறக்குமதி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
134 புதிய நோய்த்தொற்றுகளுடன் சபா அதிக எண்ணிக்கையிலான சம்பவங்களைப் பதிவு செய்தது. மொத்தமாக உள்நாட்டில் 119 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 வெளிநாட்டினர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இப்புதிய நோய்த்தொற்றுகளால் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 10,505- ஆக உயர்ந்துள்ளன என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று 39 பேர் குணமடைந்துள்ள நிலையில், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,602-ஆக உயர்ந்துள்ளது. என்மர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.