Home One Line P1 கொவிட்19: புதிதாக 71 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: புதிதாக 71 சம்பவங்கள் பதிவு

442
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் 71 புதிய கொவிட்19 சம்பவங்களை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தமாக நாட்டில் 10,576 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

புதிய சம்பவங்களில், 63 சபாவில் கண்டறியப்பட்டன. 10 லாவுட் தொற்றுக் குழுவுடன் சம்பந்தப்பட்டவை. மேலும், 47 பங்காவ்-பங்காவ் தொற்றுக் குழுவுடன் தொடர்புடையவை.

கடந்த 24 மணி நேரத்தில் புதிய இறப்புகள் அல்லது தொற்றுக் குழுக்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று 64 பேர் குணமடைந்துள்ள நிலையில், நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,666-ஆக உயர்ந்துள்ளது. அறுவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.