Home One Line P1 கெத்தாபியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்- காவல் துறை

கெத்தாபியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்- காவல் துறை

431
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2013- ஆம் ஆண்டில் சபா லாஹாட் டாத்துவில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை  ஒரு கேலிக்கூத்து என்று முன்னாள் அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவ சபா வாரிசான் வேட்பாளர் டத்தோ முகமடின் கெத்தாபியின் சாட்சியத்தை காவல் துறையினர் பதிவு செய்ய உள்ளனர்.

சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு வாக்குமூலம் பதிவு செயல்முறை செயல்படுத்தப்படலாம் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

“வாக்கு மூலத்தை சபாவில் இருக்கும் புக்கிட் அமான் குற்ற புலனாய்வு பிரிவு குழுவால் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

“சரியான நேரத்தில் வாக்குமூலம் எடுக்கப்படும்” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உதவுவதற்காக மேலும் பல சாட்சிகளும் எதிர்காலத்தில் அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில், செகாமா வேட்பாளர் முகமடின், 90 விநாடி காணொலியில், 2013 தண்டுவோ ஊடுருவலை குறைத்துப் பேசியப் பிறகு மன்னிப்பு கோரியிருந்தார். ஆயினும், அது வாரிசானின் பெரும் பின்னடைவாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2013- ஆம் ஆண்டு சுலு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு சண்டை, 13- வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற தேசிய முன்னணிக்கு உதவுவதற்கான ஒரு நாடகம் என்று முகமடின் கெத்தாபி கூறியிருந்தார். அது பலரது கண்டனத்திற்கு ஆளானது.

அவர் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், வாரிசான் தேர்தலில் தோல்வியடைவதைக் காண விரும்புபவர்களால் பரப்பப்பட்டதாகவும் முகமடின் கூறினார்.