Home One Line P1 கொவிட்19: தனிமைப்படுத்தப்படும் வெளிநாட்டினர் 4,700 ரிங்கிட் செலவை ஏற்க வேண்டும்

கொவிட்19: தனிமைப்படுத்தப்படும் வெளிநாட்டினர் 4,700 ரிங்கிட் செலவை ஏற்க வேண்டும்

523
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து அனைத்துலக நுழைவாயில்களிலிருந்தும் நுழையும் அனைத்து குடிமக்கள் அல்லாத நபர்களும் செப்டம்பர் 24 வியாழக்கிழமை முதல் முழு தனிமைப்படுத்தப்படும் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

4,700 ரிங்கிட் என்ற விகிதத்தில் மானியமின்றி முழு கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். 2,600 ரிங்கிட் இயக்க கட்டணங்கள் மற்றும் 2,100 ரிங்கிட் தங்குமிட செலவு ஆகும்.

“முதல் நபருடன், ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நபர்களுக்கு, தங்குமிட செலவு பாதியாக அதாவாது 700 ரிங்கிட்டாகும்.

#TamilSchoolmychoice

“6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, தங்குமிட செலவு இலவசம்” என்று இஸ்மாயில் சப்ரி வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மலேசியர்களைப் பொறுத்தவரை, தனிமைப்படுத்தப்பட்ட செலவு மானியத்தை பராமரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

“மலேசியர்கள் 2,100 ரிங்கிட் தங்கும் விடுதி செலவை மட்டுமே செலுத்த வேண்டும், அதே நேரத்தில் 2,600 ரிங்கிட் இயக்க செலவு அரசாங்கத்தால் ஏற்கப்படும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, நாட்டிற்குள் நுழையும் அனைத்து தனிநபர்களுக்கும் தனிமைப்படுத்தப்படும் கட்டணங்கள் தங்கள் சொந்த செலவில் இருப்பதை அரசாங்கம் முடிவு செய்தது.