வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள்படி, உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 12,000- க்கும் அதிகமானதாக உயர்ந்துள்ளது.
இத்தொற்றுக் காரணமாக உலகளாவிய இறப்புகளின் மொத்த எண்ணிக்கை இப்போது 979,000- க்கும் அதிகமாக உள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து 202,000- க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து பிரேசிலில் 138,000 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இந்தியா மற்றும் மெக்சிக்கோ முறையே 91,000 மற்றும் 74,000 உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், பிரிட்டனில் கிட்டத்தட்ட 42,000 பேர் இந்த பெருந்த்தொற்றால் மரணமுற்றுள்ளனர்.
இத்தாலி, பெரு, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை 30,000- க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.
ஈரான் மற்றும் கொலம்பியாவில் 24,000- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளில் 20,000- க்கும் குறைவான இறப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.