Home One Line P1 1,663 நிறுவனங்கள் ஊதிய மானிய திட்ட விண்ணப்பத்தில் மோசடி செய்துள்ளன

1,663 நிறுவனங்கள் ஊதிய மானிய திட்ட விண்ணப்பத்தில் மோசடி செய்துள்ளன

369
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊதிய மானிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மொத்தம் 1,663 நிறுவனங்கள் மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்.எஸ்.எம்) ஆவணங்களை பொய்யாக்கியதாக மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நிறுவனங்கள் 14,800 ஊழியர்களுக்கு 31 மில்லியன் மானியத்துடன் விண்ணப்பித்தபோது இந்த மோசடி அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், 670,000 ரிங்கிட் ஊதிய மானியத்தைப் பெற்ற 89 முதலாளிகளிடமிருந்தும் தனது அமைச்சகத்திற்கு புகார்கள் வந்ததாக அவர் கூறினார். மானியம் பெற்ற நிறுவனங்களில் 846 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அடையாளம் காணப்பட்ட அனைத்து நிறுவனமும் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது சம்பந்தப்பட்ட முதலாளிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

மார்ச் 27 அன்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்த மக்கள் பொருளாதார தூண்டுதல் தொகுப்பு (பிரிஹாடின்) கீழ் ஊதிய மானிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.