Home One Line P2 ஆஸ்ட்ரோ ஆதரவில், சிறு, நடுத்தர வணிக முனைவர்களுக்கான கருத்தரங்கம்

ஆஸ்ட்ரோ ஆதரவில், சிறு, நடுத்தர வணிக முனைவர்களுக்கான கருத்தரங்கம்

600
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் அனைத்து சிறு, நடுத்தர வணிக முனைவர்களுக்கான (SME) “பவர் அப்” – ‘Power Up!’ – எனும் வெபினார் தொழில்நுட்பம் மூலம் நடத்தப்படும் வணிக இயங்கலைக் கருத்தரங்கில் (Online seminar) கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

பிரபல தொழில் வல்லுநர்களிடமிருந்து வணிக நுணுக்கங்களை கற்றுக் கொள்வதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணல்களை வெல்ல ஓர் அரிய வாய்ப்பைப் பங்கு பெறுபவர்கள் பெற முடியும்.

‘Power Up!’  வெபினாரைப் பற்றிய விவரங்கள் :

• செப்டம்பர் 30, 2020 அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME) உள்ளிட்ட உள்ளூர் வணிகங்களுக்கு நுணுக்கங்களை வழங்கும் விதத்தில் தொழில் வல்லுநர்கள் கலந்து சிறப்பிக்கும் ‘Power Up! – Strategising Your Business For Post-Pandemic Success’ (‘Power Up!’) – எனும் வெபினாரில் (webinar) கலந்து பயனடைய அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

• வெபினாரின் போது, பங்கேற்பாளர்கள் புகழ்பெற்ற பேச்சாளர்களின் கருத்துகளைக் கேட்டறிவர். பேச்சாளர்களின் விவரங்கள் பின்வருமாறு:

o டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் (Malaysian Associated Indian Chambers of Commerce and Industry, MAICCI) தலைமைச் செயலாளர்;

o கணேஷ் குணரத்னம், PwC-இன் இயக்குனர்; செயல்பாட்டு மூலதன நிர்வாகத்துறைத் தலைவர் (Working Capital Management Leader);

o பேராசிரியர் டாக்டர் காதர் இப்ரஹிம், தன்முனைப்பு பேச்சாளர்.

• கடினமான காலங்களிலும் தற்போதைய பொருளாதார நிலைப்பாட்டிலும் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள குறிப்புகளை வழங்குவதோடு ‘Power Up!’ பணக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம், மேலும் நெருக்கடியின் போது வணிகத்தை இயக்குவதற்கான நேர்மறையான சிந்தனையாற்றல்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றை சித்தரிக்கும்.

• இந்த வெபினாரின் கேள்வி-பதில் அங்கத்தில், கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் இரண்டு, ஒரு மணி நேர நேர்காணல்களை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்: ராகா வானொலி மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் இடம்பெறும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான, ‘விழுதுகள்’ போன்றவற்றில் தங்கள் வணிகத்தைப் பற்றி மேலும் பகிர்ந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை பெறுவர். ராகா அறிவிப்பாளர், உதயா தொகுத்து வழங்கும் ‘Power Up!’ தமிழில் நடத்தப்படும்.

• பதிவு செய்ய மற்றும் ‘Power Up!’ பற்றிய மேல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.