Home One Line P1 சபா தேர்தல் : பிற்பகல் 3.00 மணிவரை 58 விழுக்காடு வாக்குப் பதிவு

சபா தேர்தல் : பிற்பகல் 3.00 மணிவரை 58 விழுக்காடு வாக்குப் பதிவு

532
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்றுக் கொண்டிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிற்பகல் 3.00 மணிவரை 58 விழுக்காட்டு பதிவு பெற்ற வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலில் இந்த வாக்களிப்பு குறைந்த அளவுதான் என மதிப்பிடப்படுகிறது.

எனினும் மாலையில் மேலும் அதிகமானோர் வாக்களிப்பர். அதன் மூலம் வாக்குப் பதிவு விழுக்காடு 60 விழுக்காட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.