Home One Line P1 சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -10; தேசியக் கூட்டணி – 15;...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -10; தேசியக் கூட்டணி – 15; மற்றவை – 0

507
0
SHARE
Ad

கோத்தாகினபாலு :(இரவு 8.20 மணி நிலவரம்)

இன்று மாலை 5.30 மணியுடன் சபா மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்து, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல்கட்டமாக வாரிசான் 10 தொகுதிகளிலும், தேசிய முன்னணி, பெர்சாத்து உள்ளிட்ட தேசியக் கூட்டணி 10 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.

வாரிசான் தனியாக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான ஜசெக, 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

#TamilSchoolmychoice

தேசியக் கூட்டணி சார்பில் அம்னோ 3 தொகுதிகளில் முன்னணி வகிக்க, பெர்சாத்து 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. அம்னோவை விடக் கூடுதலான தொகுதிகளில்  பெர்சாத்து முன்னணி வகிப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்டார் கட்சி 4 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதுவும் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியாகும்.

பிபிஎஸ் 2 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதுவும் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியாகும்.

இறுதி நிலவரங்கள் அதிகாரபூர்வமாக இரவு 10.00 மணிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)