Home One Line P1 கொவிட்19: கோலாலம்பூர், சிலாங்கூர் வணிக வளாகங்களில் தொடரும் தொற்றுகள்

கொவிட்19: கோலாலம்பூர், சிலாங்கூர் வணிக வளாகங்களில் தொடரும் தொற்றுகள்

460
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமீபத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல வணிக வளாகங்களில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களில், குறைந்தது ஐந்து வணிக வளாகங்கள், கோலாலம்பூரில் நான்கு மற்றும் சிலாங்கூரில் பல சம்பவங்களும் கண்டறியப்பட்டன.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட வணிக வளாகங்களில் கிருமிநாசினி செயல்முறை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தி லிங்க், சூரியா கேஎல்சிசி, என்யூ சென்ட்ரல், கேஎல் கேட்வே, சன்வே பிரமிட் ஆகிய வளாகங்கள் கடந்த 10 நாட்களில் தொற்று ஏற்பட்ட வளாகங்களாகும்.

செப்டம்பர் 24 அன்று, தி லிங்க் நிர்வாகம், அங்கு குழந்தை பராமரிப்பு மையத்தில் பங்கேற்றவரின் பெற்றோர் கொவிட்19 தொற்றுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

சூரியா கேஎல்சிசியில் செப்டம்பர் 25 அன்று, சூரியா கேஎல்சிசியில் அமைந்துள்ள பிரத்தியேக உடற்பயிற்சி கூடமான பாபெல், அதன் உறுப்பினர்களில் ஒருவர் கொவிட்19 தொற்றுக்கு சாதகமாகப் பரிசோதிக்கப்பட்டதாக அறிவித்தது.

என்யூ சென்ட்ரலில், செப்டம்பர் 27 அன்று, நு சென்ட்ரல் மேனேஜ்மென்ட் தனது ஊழியர்களில் ஒருவர் கொவிட்19 தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

கொவிட்19 நோயாளி தொடர்பான மற்ற அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவ்வளாகம் தெரிவித்துள்ளது.

நாட்டில், சபா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றுச் சம்பவங்களை அடுத்து, இப்போது தீபகற்பத்திலும், குறிப்பிடப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.