கோத்தா கினபாலு: பிபிஎஸ் பொதுச் செயலாளர் சாஹிட் சாஹிம் தனது ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதற்கு வாரிசான் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதில் கூறிய வாரிசான் துணைத் தலைவர் ஜாவுஜான் சம்பாங்காங் ”இதை யார் சொன்னாரோ, அது அவரது கருத்து” என்று வாரிசான் தலைவரும், முன்னாள் சபா முதல்வருமான முகமட் ஷாபி அப்டாலின் இல்லத்தில் சந்தித்தபோது கூறினார்.
ஒரு புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்க வாரிசான் பிளாசில் அக்கட்சி இணைந்தது என்ற குற்றச்சாட்டை நேற்று பிபிஎஸ் மறுத்தது.
நேற்று, சபா தேசிய முன்னணி மற்றும் சபா தேசிய கூட்டணி இரண்டு மணிநேர சந்திப்பை நடத்திய பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உடன்பாட்டை எட்ட முடியவில்லை.
அதைத் தொடர்ந்து, சபா தேசிய முன்னணி தலைவர், புங் மொக்தார் ராடின் மற்றும் சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளராகப் பேசப்படுகிறார்கள்.
அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யுமாறு ஜுஹாரைக் கேட்டதாக புங் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதனிடையே, புதிய சபா முதலமைச்சர் நாளை செவ்வாய்க்கிழமை பதவி ஏற்பார் என்று அரண்மனை தெரிவித்துள்ளது.