Home One Line P2 தமிழகத்தில் அக்டோபர் 31 வரை திரையரங்குகள் செயல்படத் தடை

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை திரையரங்குகள் செயல்படத் தடை

533
0
SHARE
Ad

சென்னை: திரையரங்குகளில் சமீபத்திய வெளியீடுகளைக் கண்டு இரசிக்க தமிழகம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

தமிழக அரசு செவ்வாய்க்கிழமை கொவிட்19 தொற்றால் தூண்டப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து, அக்டோபர் 31 வரை புதிய தளர்வுகளுடன் தடையை நீட்டித்துள்ளது.

திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சமூக அரங்குகள், கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புதிய வழிகாட்டுதலின் கீழ், கட்டாயமாக முகக்கவசங்களை அணிவது, கூடல் இடைவெளியை பராமரித்தல் மற்றும் கிருமித்தூய்மிகள் உள்ளடக்கிய தேவையான அனைத்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் திரைப்படத் துறை அதிகபட்சம் 100 நபர்களைக் கொண்டு படப்பிடிப்புகளை மேற்கொள்ளலாம்.

ஊரடங்கு உத்தரவால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், 75 ஊழியர்களைக் கொண்ட திரைப்படப் படப்பிடிப்புகளை அரசாங்கம் முன்பு அனுமதித்திருந்தது.