வாஷிங்டன்: அமெரிக்காவில் 400,000 சீன மாணவர்களில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் பிற தகவல்களை சேகரிக்க சீனாவின் முயற்சியில் இயங்கும் 1 விழுக்காடு மாணவர்களை மட்டுமே அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
அதிபர் டொனால்டு டிரம்பின் சீனக் கொள்கையின் வளர்ச்சியில், முன்னணி நபராக விளங்கும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாட் பாட்டிங்கர், சீன மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று கூறினார்.
“இது ஓர் அறுவை சிகிச்சை அணுகுமுறை” என்று அவர் கூறினார்.
“அதிபர் டிரம்ப் அந்த பாரிய எண்ணிக்கையில் சுமார் 1 விழுக்காட்டை குறிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இராணுவத்துடன் இணைந்த சீன ஆராய்ச்சியாளர்களை குறிவைத்து, சில சந்தர்ப்பங்களில் தவறான அடையாளங்களின் கீழ் அவர்கள் இயங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
அண்மையில் இது தொடர்பாக, சீன நாட்டினரின் 1,000-க்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்கா இரத்து செய்திருந்தது.
கடந்த 29 பிரகடனத்தில், அதிபர் டொனால்டடு டிரம்ப் சில சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அமெரிக்காவிற்குள் நுழைவதை தடைசெய்தார்.
முக்கியமான அமெரிக்க தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பெறுவதற்குப் அவர்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.