Home One Line P1 மண் அரிப்பைத் தொடர்ந்து 3 மாடி குடியிருப்பிலிருந்து 11 பேர் வெளியேற்றப்பட்டனர்

மண் அரிப்பைத் தொடர்ந்து 3 மாடி குடியிருப்பிலிருந்து 11 பேர் வெளியேற்றப்பட்டனர்

583
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சியாரான் சைட் புத்ராவில் உள்ள மூன்று மாடி குடியிருப்பில் 11 பேர் நேற்று இரவு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஹாங் துவா மற்றும் செபுத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 17 தீயணைப்பு வீரர்கள் இரவு 10 மணியளவில் அழைப்பைப் பெற்ற பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் அடிவாரத்தில் மண் அரிப்பைக் கண்டறிந்தது, இது கீழ் தளத்திலுள்ள ஆறு வீடுகளைப் பாதித்ததாகத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நடத்திய ஆய்வில் அவர்கள் அங்கு தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.