Home GE-13 கெராக்கான் போட்டியிடும் 11 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 இந்திய வேட்பாளர்கள் – சட்டமன்றங்களுக்கு ஒருவருமில்லை.

கெராக்கான் போட்டியிடும் 11 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 இந்திய வேட்பாளர்கள் – சட்டமன்றங்களுக்கு ஒருவருமில்லை.

649
0
SHARE
Ad

gerakan-logo

ஏப்ரல் 15 – தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சிகளுள் ஒன்றான கெராக்கானுக்கு இந்த முறை 11 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் மூன்று இடங்கள் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பினாங்கிலுள்ள பத்து கவான் தொகுதியில் என்.கோபாலகிருஷ்ணன் போட்டியிடுவார்.

#TamilSchoolmychoice

பூச்சோங் தொகுதியில் வெளியுறவுத் துணையமைச்சர் செனட்டர் கோகிலன் பிள்ளை போட்டியிடுகின்றார். கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள சிகாம்புட் தொகுதியில் வழக்கறிஞர் பி.ஜெயந்தி தேவி போட்டியிடுகின்றார்.

எடுத்தவுடன் பார்க்கும் போது மூன்று இந்தியர்களுக்கு கெராக்கான் கட்சி தொகுதிகள் ஒதுக்கியுள்ளது வரவேற்புக்குரிய ஒன்றாக தெரிந்தாலும், இந்த 3 தொகுதிகளும் கடந்த முறை ஜசெக மிகப் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் என்பதால் அவற்றை மீண்டும் கெராக்கான் சார்பில் இந்த மூன்று இந்திய வேட்பாளர்களும் வெல்வது கடினம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே சமயம், கெராக்கான் கட்சி போட்டியிடும், 31 சட்டமன்றத் தொகுதிகளில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.