Home கலை உலகம் புனே படப்பிடப்பில் பங்கேற்றார் அஞ்சலி- பேட்டியை காணொலியில் பதிவு செய்து வெளியீடு

புனே படப்பிடப்பில் பங்கேற்றார் அஞ்சலி- பேட்டியை காணொலியில் பதிவு செய்து வெளியீடு

674
0
SHARE
Ad

anjaliபுனே, ஏப்ரல் 15- நடிகை அஞ்சலி இன்று புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றார். இது பற்றி அவர் காணோலியில் தோன்றி பேட்டியளித்தார்.

அதை பதிவு செய்து  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் தன்னை கொடுமைபடுத்துவதாக நடிகை அஞ்சலி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவர்களைவிட்டு கடந்த வாரம் பிரிந்து சென்றார். 5 நாட்கள் மும்பையில் தஞ்சம் அடைந்திருந்த அவர் பிறகு ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில் அவர் பேசி பதிவு செய்த காணோலி தட்டை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தார்.  அதில் கூறி இருப்பதாவது:-

#TamilSchoolmychoice

கடந்த ஐந்து ஆறு நாட்களாக என் வாழ்வில் தேவையில்லாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இதனால் எனது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பட குழுவினர் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களுக்கு சிரமம் தந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். இப்போது பிரச்னை முடிந்துவிட்டது. இனி சுதந்திரமாக வாழ்வேன். என் வாழ்க்கை என் கையில்தான் உள்ளது.

எனக்கு ஆதரவு தந்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு  நன்றி. இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார். இன்று முதல் புனேயில் நடக்கும் வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு பட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ‘பலுப்பு படத்தில் நடித்து முடிக்க வேண்டிய காட்சிகளையும் விரைவில் முடித்துக்கொடுப்பாராம் அஞ்சலி.