Home 13வது பொதுத் தேர்தல் பேராக் மாநில பக்காத்தான் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

பேராக் மாநில பக்காத்தான் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

812
0
SHARE
Ad

470x275x2041ffef309829299d39b43e93ab8a4b.jpg.pagespeed.ic.H8xnEhxqMIஈப்போ,ஏப்ரல் 15 – பேராக் மாநிலத்திற்கான பொதுத்தேர்தல் அறிக்கையை பக்காத்தான் இன்று வெளியிட்டது.

இது குறித்து பக்காத்தானின் தேர்தல் அறிக்கைக் குழு தலைவர் டாக்டர் கைருதீன் அப்துல் மாலிக் கூறுகையில்,

“இந்த தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், பேராக் மக்களின் தற்போதைய தேவைகளை அறிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள 5 அம்சங்கள், தொழில் புரிவோருக்கு ஏற்ற வகையிலும், பேராக் மாநில மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலும் உள்ளன” என்று கைருதீன் தெரிவித்தார்.

பேராக் மாநிலத்திற்கான பக்காத்தானின் தேர்தல் அறிக்கை 5 சிறப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அவை,

1. பேராக் மாநிலத்தில் வறுமையை ஒழிக்கும் விதமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 760 ரிங்கிட் உதவித்தொகையாக வழங்கப்படும்.

2. 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வீட்டு வரி, நிலவரி, தண்ணீர் கட்டணம் ஆகியவற்றின் விலை உயராமல் பாதுகாப்படும். அதோடு 1000 ரிங்கிட் மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கன அளவு தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

3.கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலின் போது, பேராக் மாநிலத்தில் பக்காத்தான் அறிவித்ததைப் போல், நீண்ட காலமாக தற்காலிக நில உரிமை வைத்திருக்கும் பேரா மக்களுக்கு, அந்நிலங்களுக்கான நிரந்தர உரிமை வழங்கப்படும்.

4. பேராக் மாநிலத்தைச் சுற்றி உருவாகும் புதிய தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு, 99 வருடத்திற்கான நிலக் குத்தகைகள் வழங்கப்படும்.

5. 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அல்லது 700 பணியாளர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு நிலவரியில் 50% தள்ளுபடி வழங்கப்படும்

என்பது போன்ற சிறப்பு அம்சங்கள் பேராக் மாநில பக்காத்தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.