Home One Line P1 சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை

சிலாங்கூர்: சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கு கொவிட்19 இலவச பரிசோதனை

541
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 20 முதல் 26 வரை சபாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு இலவச கொவிட்19 பரிசோதனையை அளிக்கிறது.

மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனமான செல்கேட் ஹெல்த்கேர் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு சொந்தமான செல்கேர் மருந்தகத்தின் அனைத்து கிளைகளிலும் பரிசோதனை செய்யலாம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

பரிசோதனையை நாடுபவர்கள் சபாவிலிருந்து திரும்பிய விமான பயணச் சீட்டையும், சிலாங்கூரில் வசிக்கும் சான்றுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தொடங்கி மருந்தகங்களுக்கு செல்லலாம் என்றும், https://selcareclinic.com/our-clinics/ என்ற வலைத்தளத்தின் மூலம் அருகிலுள்ள மருந்தகங்களைத் தொடர்புக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

அதே நேரத்தில், சிலாங்கூரில் மதுக்கடைகளைக் கொண்ட உணவகங்கள் இன்று சனிக்கிழமை தொடங்கி தினமும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதே நேரத்தில் அனைத்து வகையான இரவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகள் செயல்படுவதற்கு இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“எந்த பெரிய மாநாடுகளையும் கூட்டங்களையும் மாநில அரசு ஊக்குவிக்கவில்லை, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை எந்த நேரத்திலும் 250 பேருக்கு மிகாமல் இருக்க அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.