Home One Line P1 நாடு தழுவிய அளவில் மஇகா மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடு தழுவிய அளவில் மஇகா மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று முதல் அக்டோபர் 8 வரை நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மஇகா மாநாடு, கொவிட்19 பாதிப்பைத் தொடர்ந்து உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்த உத்தரவை வெளியிட்டதாக கட்சித் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

“இன்று, மஇகா மாநாடு பேராக், கெடா மற்றும் பெர்லிஸில் நடைபெறவிருந்தது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது. மாநில மற்றும் மத்திய மட்டங்களில் உள்ள அனைத்து கூட்டங்களும் பின்னர் நிர்ணயிக்கப்பட உள்ள தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன” என்று மனிதவள அமைச்சருமான சரவணன் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, கொவிட்19 சம்பவம் அதிகமாகப் பதிவானதைத் தொடர்ந்து மகளிர், இளைஞர், புத்ரி மற்றும் அம்னோ தொகுதிகளின் அனைத்து கூட்டங்களும் மாநாடுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்திருந்தார்.