Home One Line P2 9 நாடுகளுக்கு அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது

9 நாடுகளுக்கு அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது

666
0
SHARE
Ad

வாஷிங்டன்: வட கொரியா மற்றும் எட்டு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் எல்லா உதவியையும் நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மனிதக் கடத்தல் தொடர்பாக இந்த நாடுகள் குறைந்தபட்ச தரத்தை பூர்த்தி செய்யும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

புருண்டி, சீனா, கியூபா, எரிட்ரியா, ஈரான், நிகரகுவா, ரஷ்யா, சிரியா ஆகியவை அவற்றில் அடங்கும்.

#TamilSchoolmychoice

கொவிட்19 தொற்றுநோய் மற்றும் எபோலா தொற்றுத் தொடர்பான உதவிக்கு மட்டுமே இந்த உத்தரவு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறினார்.

வியாழக்கிழமை தொடங்கும் உத்தரவு 2021 நிதியாண்டு முழுவதும் பின்பற்றப்படும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில், வட கொரியா மற்றும் 18 நாடுகள் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதில் மிக மோசமான நாடுகளாக பட்டியலிட்டுள்ளது.

செப்டம்பர் 28 தேதியிட்ட ஒரு குறிப்பில், அமெரிக்க அதிபர் அனைத்துலக நாணய நிதியம் உட்பட அமெரிக்க பலதரப்பட்ட மேம்பாட்டு வங்கிகளின் தலைவர்களுக்கு, பட்டியலிடப்பட்ட நாடுகளுக்கு கடன்களை மறுக்க அறிவுறுத்தினார்.