கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் 432 கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது மலேசியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொற்று எண்ணிக்கையாகும்.
பதிவான 432 சம்பவங்களில் 3 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
இன்று பதிவு செய்யப்பட்ட தொற்று சம்பவங்களின் அடிப்படையில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்கள் 12,813 ஆகும். 429 தொற்று சம்பவங்களில் 409 உள்ளூர்வாசிகள், 20 பேர் வெளிநாட்டினர்.
இன்று 57 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,340 ஆகும்.
இன்னும் 2,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். என்மருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.