அரண்மனைக் காப்பாளர் அகமட் பாடில் ஷாம்சுடின் கூறுகையில் அரண்மனை இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைக் கடுமையாகக் கருதுகிறது என்று தெரிவித்தார்.
வாட்சாப்பில் பல நபர்கள் ஊடகங்களுக்கு பரப்பிய தவறான அறிக்கைகளை இது குறிப்பிட்டுள்ளது. மாமன்னரின் பெயரையும் அவரது புகைப்படங்களையும் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள், மாமன்னர் மற்றும் இஸ்தானா நெகாராவின் நம்பகத்தன்மையை நாசப்படுத்தியது மட்டுமல்லாமல், சங்கடத்திற்கு வழிவகுக்கும். மேலும், நாட்டில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அகமட் கூறினார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல் துறை மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஆகியோரிடம் புகார் அளிக்க அரண்மனை தயங்காது என்றும் அவர் கூறினார்.
“அதே நேரத்தில், இஸ்தானா நெகாரா போலி செய்திகளைக் கண்டு மக்கள் பீதியடையவும், நம்பவும் வேண்டாம் என்று முறையிடுகிறது. காவல் துறை மற்றும் எம்சிஎம்சியின் நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக போலி செய்திகளைப் பகிர்வதை தவிர்க்கக் கோரி இஸ்தானா நெகாரா மக்களிடம் முறையிடுகிறது ” என்று அது கூறியது.