Home One Line P1 சபாவில் கூடுதல் 3 பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது

சபாவில் கூடுதல் 3 பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் உள்ள கோத்தா கினபாலு, பெனாம்பாங் மற்றும் புதாதான்  வட்டாரங்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயின் கீழ் வைக்கப்படும்.

அங்கு கொவிட்19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைக் எடுக்கப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

இந்த நடவடிக்கையை சபா அரசு முன்வைத்ததாக அவர் கூறினார். அண்மையில் சபாவில் கொவிட்19 தொற்று அதிகமாகப் பதிவானதை அடுத்து தீபகற்பத்தில் இதனால் தொற்று எண்ணிக்கை அதிகமானது. பெரும்பாலான சம்பவங்கள் சபாவிலிருந்து திரும்பியவர்களாவர்.

#TamilSchoolmychoice

இன்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் 432 கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.  இது மலேசியாவில்  இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொற்று எண்ணிக்கையாகும்.

பதிவான 432 சம்பவங்களில் 3 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

இன்று பதிவு செய்யப்பட்ட தொற்று சம்பவங்களின் அடிப்படையில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட  மொத்த சம்பவங்கள் 12,813 ஆகும். 429 தொற்று சம்பவங்களில் 409 உள்ளூர்வாசிகள், 20 பேர் வெளிநாட்டினர். சபாவில் மட்டும் 130 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 57 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,340 ஆகும்.

இன்னும் 2,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். என்மருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.