கோலாலம்பூர்: மனித வள அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஊழியர் தற்போது சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொவிட்19 பரவுவதைத் தடுக்க அமைச்சகம் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் நெருங்கிய தொடர்புகளின் பட்டியலை சுகாதார அமைச்சகத்திற்கு அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
“மனித வள அமைச்சு ஊழியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்பட்டுள்ளனர்” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமிநாசினி நடைமுறைகள் செய்யப்படும் என்றும், அமைச்சின் அதிகாரிகளுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் அமைச்சகம் கூறியது.
“அனைத்து திட்டங்களும், நடவடிக்கைகளும் அக்டோபர் 16 வரை ஒத்திவைக்கப்படும்” என்று அமைச்சகம் கூறியது.