Home One Line P1 ஆற்று நீர் மாசுபாட்டுக்கு காரணமான இருவர் கைது

ஆற்று நீர் மாசுபாட்டுக்கு காரணமான இருவர் கைது

508
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சுங்கை பாதாங் பெனார், நெகிரி செம்பிலான் மற்றும் சுங்கை செமினி ஆகிய இடங்களின் மாசுபாட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட இருவருமே கோத்தா பாருவிலிருந்து நிலாய் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டனர் என்று காவல் துறைத் துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

“இந்த வழக்கு குறித்த முழுமையான அறிக்கை எனக்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை நெகிரி செம்பிலான் காவல் துறையினர் விசாரித்தனர். நாம் அவசரப்பட முடியாது என்பதால் விசாரிக்க எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள், ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், சிரம்பானில், தேசிய நீர் துறை ஆணையம் (ஸ்பான்) திங்களன்று அளித்த காவல் துறை புகார் அறிக்கையைத் தொடர்ந்து, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430- இன் கீழ் இருவரையும் விசாரித்ததாக நெகிரி செம்பிலான் காவல் துறை துணைத் தலைவர் சே ஜகாரியா ஓத்மான் தெரிவித்தார்.

நிலாய் தொழில்துறை பூங்காவின் விளிம்பில் உள்ள புதர்களில் காணப்படும் கழிவுகள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆற்றில் மாசுபடுவதற்கான ஆதாரமாக இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சகம் திங்களன்று தெரிவித்தது.

இந்த மாசுபாடு காரணமாக சுங்கை செமினி மற்றும் புக்கிட் தம்போய் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டை நிறுத்தியது. இதன் விளைவாக பெட்டாலிங், உலு லாங்காட், கோலா லங்காட் மற்றும் செபாங்கில் உள்ள 309,687 வீடுகள் பாதிக்கப்பட்டன.