Home One Line P1 உலக சுகாதார நிறுவன நிர்வாகக் குழுவில் மலேசியா இடம்பெற்றது

உலக சுகாதார நிறுவன நிர்வாகக் குழுவில் மலேசியா இடம்பெற்றது

477
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மேற்கு பசிபிக் பிராந்தியத்தின் (WPRO) பிரதிநிதியாக மலேசியாவின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் 2021 அமர்வின் போது நடைபெறவுள்ள தேர்தலில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய WPRO நாடுகளுக்கு மலேசிய சுகாதார இயக்குநர் நன்றி தெரிவித்தார்.

“மதிப்புமிக்க உறுப்பினராக பணியாற்றுவது மலேசியாவுக்கு ஒரு மரியாதை, குறிப்பாக நாம் அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கியுள்ளதால், பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் மலிவு அறுவை சிகிச்சையை ஊக்குவிப்பதில் நாம் சிறந்த தலைமைத்துவத்தை காட்டியுள்ளோம்.

#TamilSchoolmychoice

“உண்மையிலேயே, பாதுகாப்பான, மலிவு அறுவை சிகிச்சை என்பது யுனிவர்சல் ஹெல்த் கவரேஜின் (யுஎச்சி) மிக அடிப்படையான கூறுகளில் ஒன்றாகும். இது சம்பந்தமாக, அனைத்துலக அறுவை சிகிச்சை சங்கத்தின் (ஐ.எஸ்.எஸ்) உலகளாவிய அறுவை சிகிச்சை துணைக்குழுவின் தலைவராக எனது தற்போதைய நிலையை நாம் பயன்படுத்துவோம், ” என்று டாக்டர் நூர் ஹிஷாம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த நிர்வாகக் குழுவில் மூன்று ஆண்டு காலத்திற்கு சுகாதார கொள்கைகளை வழிநடத்த உறுப்பு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தகுதியான சுகாதார வல்லுநர்கள் இடம்பெறுவர்.