Home One Line P1 நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

446
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெட்டாலிங், உலு லங்காட், கோலா லங்காட், சிப்பாங் மற்றும் புத்ராஜெயா மாவட்டங்களில் உள்ள அனைத்து 274 பகுதிகளிலும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது.

இன்று காலை 6 மணிக்கு முழுமையாக அனைத்து பயனீட்டாளருக்கும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாய்மி காமாரால்சாமான் தெரிவித்தார்.

“பயனீட்டாளருக்கு வழங்கப்படும் சுத்தமான நீர் சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட தர சோதனை மற்றும் இணக்கம் மூலம் சென்றுள்ளது.

#TamilSchoolmychoice

“ஆயர் சிலாங்கூர் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக பயனீட்டாளர் இந்த திட்டமிடப்படாத இடையூறு போது பொறுமைக் காத்ததற்கும், ஒத்துழைத்தற்கும் நன்றி” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அண்மையில், பெட்டாலிங், உலு லாங்காட், கோலா லாங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 273 இடங்களில் 300,000- க்கும் மேற்பட்டோர் நீர் விநியோகத் தடையை எதிர் நோக்கினர். சுங்கை செமினியில் மாசு இருப்பது கண்டறியப்பட்ட பின்னர்  ஞாயிற்றுக்கிழமை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இது மொத்தம் 309,605 வீட்டைப் பாதித்துள்ளது என்று சாரிகட் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் தெரிவித்திருந்தது. இது சம்பந்தமாக இருவர் கைது செய்யப்படுள்ளனர்.