Home One Line P1 சபா முதல்வருக்கு கொவிட்19 தொற்று

சபா முதல்வருக்கு கொவிட்19 தொற்று

739
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தற்போது கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது மக்கள் தொடர்பு செயலாளர்  எபெண்டி முகமட் சுனோ தெரிவித்தார்.

“சமீபத்திய பரிசோதனை முடிவுகள் அவர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டது.

“டத்தோஸ்ரீ பாங்லிமா ஹாஜிஜி நூர், தற்போது மேலதிக சிகிச்சைக்காக குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சிகிச்சையில் இருக்கும்போது, ​​தொலைபேசி அழைப்புகள் மற்றும் காணொலி அமர்வுகள் மூலம், சிகிச்சை தளத்தில் முதலமைச்சர் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் இன்னும் செய்து வருகிறார். மாநில அரசு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

“முதல்வர் அனைத்து சபா மக்களையும் அமைதியாக இருக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சபாவையும் மலேசியாவையும் கொவிட்19 – லிருந்து விடுவிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள அழைப்பு விடுத்தார்” என்று அவர் மேலும் கூறினார்.