கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுகளை பதிவு செய்யும் பள்ளிகள் சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டிற்காக காத்திருக்காமல் உடனடியாக மூடப்படலாம்.
கொவிட்19 தொடர்பான தேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பது பதிசோதனை மூலம் தெரியவந்தால் பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க கல்வி அமைச்சகத்திற்கு அனுமதி வழங்க ஒப்புக் கொண்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஐந்தாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் இரண்டு பெண் மாணவர்கள் இந்த தொற்றுக்கு ஆளானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கெடாவில் அதிகரிப்பு ஏற்பட்ட பின்னர் தற்போது தொற்று எண்ணிக்கை அங்கு குறைந்து வருவதாக மொகிதின் கூறினார்.
“சிவகங்கா, முடா மற்றும் சாங்லாங் உள்ளிட்ட பல தொற்றுக் குழுக்கள் இனி புதிய சம்பவங்களைப் புகாரளிக்கவில்லை.
“பாஹ் சிந்தோக் மற்றும் தெம்போக் தொற்றுக் குழுக்கள் மட்டுமே புதிய சபவங்களை பதிவு செய்து கொண்டிருந்தன, ஆனால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
“கெடாவில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பல்வேறு துறைகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் செயல்படுகின்றன என்பதை இது காட்டுகிறது.” என்று அவர் கூறினார்.