Home One Line P1 சபாவில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படும்

சபாவில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படும்

485
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக கல்வி அமைச்சகம் அக்டோபர் 25 வரை சபாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடியுள்ளது.

சபா குறித்த சிறப்பு தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாக அமைச்சகம் கூறியது.

“கொவிட்19 சம்பவங்கள் இன்னும் அதிகரித்து வருவதைக் கண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சகம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று சந்திப்புக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

“இதன் விளைவாக, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை சபாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அமைச்சகம் முடிவு செய்துள்ளது” என்று அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், உண்டுறை பள்ளிகளில் உள்ள மாணவர்கள் அந்தந்த விடுதிகளில் இருக்க வேண்டும் என்று அது கூறியது. ஆனால், பள்ளி நிர்வாகிகள் மாணவர்களின் தேவைகளையும் நல்வாழ்வையும் முழுமையாகப் பூர்த்தி செய்வார்கள் என்று உறுதியளித்தது.

முன்னதாக, தொற்று பாதிக்கப்பட்ட பள்ளிகளை மூடும் உரிமையை கல்வி அமைச்சகம் கொண்டிருக்கலாம் என்று பிரதமர் நேற்று தெரிவித்திருந்தார்.

வகுப்புகள் இயங்கலை வாயிலாக நடத்தப்படும். நாட்டில் கொவிட்19 தொடர்பான மூன்றாவது அலை சபாவில் மையமிட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் பதிவாகின்றன.

நேற்று, அதன் முதல்வர் டத்தோ ஹாஜிஜி முகமட் நோர் இந்த தொற்றுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.