Home One Line P2 கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள்

694
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இராணுவப் படையினர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு தாலிபான் வரவேற்பு அளித்துள்ளது. அமைதியை நிலைநாட்ட இதுவொரு முக்கிய நடவடிக்கை என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

“ஆப்கானிஸ்தானில் சேவை செய்துகொண்டிருக்கும் நமது வீர ஆண்களும், பெண்களும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தாயகம் திரும்பிவிடுவார்கள்” என்று டிரம்ப் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரயன், ஆப்கானிஸ்தானில் இருக்கும் 5000 அமெரிக்க வீரர்கள் 2,500- ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.