Home One Line P1 பிகேஆர் ஆதரவாளர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்

பிகேஆர் ஆதரவாளர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை மாமன்னருடன் அன்வார் இப்ராகிமின் சந்திப்பை முன்னிட்டு, குறிப்பாக இஸ்தானா நெகாரா செல்லும் முக்கிய சாலைகளில் கூட்டங்களைத் தவிர்க்குமாறு பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கட்சி உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அடுத்தடுத்த செயல்முறைகள் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

“பிகேஆர் அதன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அந்தந்த தொகுதிகளில் தொடர்ந்து தங்கள் சேவைகளை வழங்கவும், கொவிட்19 தொற்றுநோய்களின் போது மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கவும் நினைவூட்டுகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி பிகேஆர் தலைவர் நாளை செவ்வாய்க்கிழமை மாமன்னரை சந்திக்க உள்ளார்.

மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக ஒரு “வல்லமைமிக்க” பெரும்பான்மையை திரட்டியதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.