Home One Line P2 குஷ்பு பாஜகவில் இணைகிறார்!

குஷ்பு பாஜகவில் இணைகிறார்!

1368
0
SHARE
Ad

சென்னை: நடிகை குஷ்பு இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்து வந்த அகில இந்திய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

“காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நாட்டு மக்களுக்கு பணியாற்றும் வாய்ப்பை அளித்ததற்கு நன்றி. எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் காங்கிரஸ் கட்சிக்காக பல தளங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயல்பட்டதில் பெருமையடைகிறேன். ” என்று ஒரு கடிதத்தை குஷ்பு வெயிட்டுள்ளார்.

மேலும், தாம் கட்சியில் உண்மையாக உழைத்த போதும், தலைமையில் இருந்தவர்கள் தம்மை அடக்கி ஒடுக்கியதாகவும் அவர் கூறினார்.