கோலாலம்பூர்: இன்றைய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் விதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையைப் பின்பற்றி இது செயல்படுத்தப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார். மேலும், பெட்டாலிங், கோம்பாக் மற்றும் பிற மாவட்டங்களில் கிள்ளான் போன்ற சம்பவங்களின் அதிகரிப்பு மற்றும் பரவலை கணக்கில் எடுத்துக்கொண்டு இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
“இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க, தேசிய பாதுகாப்பு மன்றம் சிறப்பு அமர்வு இன்று சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த ஒப்புக் கொண்டது. அக்டோபர் 14 நள்ளிரவு 12.01 முதல், அக்டோபர் 27 வரை இது அமலுக்கு வருகிறது” என்று அவர் கூறினார்.
தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில், இனி மாவட்டத்திற்கு வெளியேயும், உள்ளேயும் செல்ல அனுமதி இல்லை.