Home One Line P1 கொவிட்19: 23 டுரோபிகானா கோல்ப் கிளப் ஊழியர்களுக்குத் தொற்று

கொவிட்19: 23 டுரோபிகானா கோல்ப் கிளப் ஊழியர்களுக்குத் தொற்று

396
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொத்தம் 23 டுரோபிகானா கோல்ப் கிளப் வளாக ஊழியர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் நிக் எசானி முகமட் பைசால் திங்களன்று உறுதிப்படுத்தினார்.

நேற்றைய சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இன்று மொத்தம் 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. நேற்று 11 ஊழியர்கள் மட்டுமே தொற்றுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“இதுவரை, டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகத்தின் 23 ஊழியர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பரிசோதனை முடிவுகள் கண்டறியப்பட்ட பின்னர் கூடுதல் 12 சம்பவங்கள் இன்று (திங்கள்) கண்டறியப்பட்டுள்ளன.

“இங்குள்ள விடுதிகளில் உள்ள மொத்தம் 567 ஊழியர்கள், சுகாதார அமைச்சகத்தால் அக்டோபர் 14 முதல் பரிசோதிக்கப்படுவார்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது,” என்று அவர் விளக்கினார்.

இதனிடையே, நேற்று, 1 உத்தாமா பேரங்காடியும், டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் கொவிட்19 அபாயம் காரணமாக மூடப்பட்டன.

மேலும் தொற்றுகள் பரவாமல் இருக்கவும், கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் நோக்கிலும் இந்த இடங்கள் மூடப்பட்டன.

கொவிட் 19 தொற்று கண்டவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் 14, 15 தேதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பரிசோதனைகள் பெட்டாலிங் வட்டார சுகாதார இலாகாவால் நடத்தப்படும்.

இந்தப் பகுதிகளில் கொவிட் 19 அறிகுறிகள் கொண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களுக்குச் சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.